தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். குடுத்தினர் மற்றும் நண்பர்களுடன் கடற்கரையில் குவிந்த மக்கள் கடல் அலையில் கால் நனைத்தும், கடற்கரை காற்று வாங்கியும் பொழுதை கழித்தனர்.
கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கடலுக்குள் செல்லாமல் தடுக்கும் விதமாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலுக்குள் யாரும் செல்ல வேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலமும் அறிவுறுத்தினர்.
இதேபோல் பெசன்ட் நகர் கடற்கரையிலும் மக்கள் குடும்பம் குடும்பமாக கூடி பொழுதை கழித்தனர்.