சென்னை கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்பேடு காளியம்மன் மேம்பாலமும், 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலமும் கடந்த 2015 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல், கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டன.
கட்டுமான பணிகள் நிறைவுடைந்ததை அடுத்து கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்களை முதலமைச்சர் இன்று திறந்துவைக்கிறார்.