மின்சாரக் காருக்கு இறக்குமதி வரியைக் குறைக்கும்படி பிரதமர் அலுவலகத்தை டெஸ்லா நிறுவனம் அணுகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நிறுவனமான டெஸ்லா தனது மின்சாரக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவும், அதற்கான வரவேற்பைப் பொறுத்துப் பின்னர் உள்நாட்டில் காரைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் மின்சாரக் கார் இறக்குமதிக்கான வரி உலக நாடுகளிலேயே இந்தியாவில் மிக அதிகம் என டெஸ்லா கருதுகிறது.
இதனால் வரியைக் குறைக்கக் கோரிப் பிரதமர் அலுவலகத்தை அணுகியுள்ளது. பிரதமர் மோடியை டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வரியைக் குறைத்தால் உள்நாட்டு மின்சாரக் கார் உற்பத்தியைப் பாதிக்கும் எனக் கூறி டாட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன