சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சுமார் 2ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் வழங்க ஆசிய உள் கட்டமைப்பு வங்கியான ஏ.ஐ.ஐ.பி. ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்திய பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார காரணிகளை மேம்படுத்த 2016 முதல் ஆசிய உள்கட்டமைப்பு வங்கி நிதி உதவி செய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை அமையவிருக்கும் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 356.67 மில்லியன் டாலர் அதாவது 2ஆயிரத்து600கோடி ரூபாய் கடனாக வழங்க ஏஐஐபி ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்தில் சென்னை வந்திருந்த ஏ.ஐ.ஐ.பி. வங்கியின் துணை தலைவர் பாண்டியன், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை ஆய்வு செய்ததோடு, முதலமைச்சர், நிதியமைச்சரையும் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.