மழலையர் பள்ளி மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில், 'வீடு தேடி பள்ளிகள்' என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியைப் போக்க அக்டோபர் மாதம் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
4 முதல் 5 வீடுகள் உள்ள இடங்களுக்கு சென்று தினசரி 2 மணி நேரம் பாடம் நடத்தவும், கற்றல் குறைபாட்டை போக்க பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.