சென்னை சிந்தாதிரிபேட்டையில், தனியார் மீன் குடோனில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத்துறையினர், ரசாயனம் தடவி விற்க முயன்ற, 200 கிலோ கெட்டு போன மீன்களை பறிமுதல் செய்தனர்.
கே.கே.எஸ். அன் கோ என்ற தனியாருக்கு சொந்தமான மீன் குடோனில், ஆந்திர மாநிலத்தில் பல நாட்களுக்கு முன்பு பிடித்த மீன்களை பதுக்கி வைத்திருந்ததும், ஃபார்மலின் ரசாயனம் தடவி பதப்படுத்தி விற்பனைக்கு அனுப்ப முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். பார்மலின் ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், பரிசோதனைக்காக 12 வகையான மீன்களை எடுத்துச் சென்றனர்.