திருவள்ளூரில் சர்ச்சையில் சிக்கிய குளிர்பான தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
சென்னையில் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். குளிர்பானம் தயாரிக்கும் முறைகள் , சேர்க்கப்படும் மூலப்பொருட்கள், காலாவதி தேதி குறித்து நடத்திய விசாரணையில் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.
மேலும் குளிர்பானம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்தனர்.