பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் இணையவழி வகுப்புகள் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்லூரிகளைத் திறப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், கொரோனா சூழலில் தனியார் கல்லூரிகளில் 75 விழுக்காடு கட்டணம் மட்டுமே பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொறியியல் சேர்க்கைக்கு நேற்று வரை 41 ஆயிரத்து 363 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், 143 அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 748 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில், அனைத்துப் பாடத்திலும் அரியர் வைக்கும் மாணவர்கள் அவற்றில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு படிக்க முடியும் என்ற நடைமுறை தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.