நாடு முழுவதும் உள்ள CBSE பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை, நடப்பு கல்வியாண்டிலும் 30 சதவிகித பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக, CBSE அறிவித்துள்ளது.
கடந்த கல்வியாண்டில், கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் 30 சதவிகித பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. இந்த ஆண்டும், பள்ளிகள் இதுவரை திறக்கப்படாமல், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு, கல்வியாண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இரண்டு பொதுத்தேர்வுகள் நடைபெறும் அறிவித்துள்ள நிலையில், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே அது நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது? எந்தெந்த பாடத்தை நடத்த வேண்டும் என்பதை CBSE இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்