சென்னையில் புறநகர் ரெயில் சேவையை பயன்படுத்த அனைத்து பயணிகளுக்கும், கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் சூழலில் முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்த அனைத்து பயணிகளுக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பெண் பயணிகள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் எல்லா நேரமும் புறநகர் ரயில் சேவையை நாளை முதல் பயன்படுத்தலாம். ஆண் பயணிகள், கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் மட்டுமே புறநகர் ரயில்களில் பயணிக்க முடியும். ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் மாஸ்க் அணியாமல் சிக்கினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.