சென்னையில் சில வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக சென்னையில் சாதாரண கட்டண பேருந்துகளில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மணலி பிராட்வே, திருவிக நகர் - நீதிமன்றம், பெரம்பூர் - பெசன்ட்நகர் வழித்தடங்களில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணிப்பதையும் காண முடிகிறது.
மேலும் வியாசர்பாடி , வள்ளலார் நகர் பகுதிகளில் ஷேர் ஆட்டோவில் ஆறு பேர் வரை பயணிக்கின்றனர்.