சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் ? உள்ளிட்டவை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல், அமைச்சர்கள் தங்களது துறையில் தெளிவுடன் இருக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் முறையான பதிலை உடனுக்குடன் அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் முதலமைச்சர் சார்பில் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.