9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களில் முறைகேடுகள் நடப்பதாக வரும் புகார்கள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்ற அமைச்சர் பொன்முடி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் தொடர்பான முடிவெடுக்கப்பட்ட பிறகு பிஇ, கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் எனத் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக விருப்பப் பாடங்களில் 9வது பாடமாக தமிழ் இணைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.