கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், சென்னை முழுவதும் சீரோ சர்வே (sero survey) எனப்படும் குருதி சார் ஆய்வு நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்களிடம் கொரோனோவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என்பதை கண்டறிய "Sero survey" எனப்படும் குருதி சார் அளவீடு நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
எந்தெந்த பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என கண்டறிந்து தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் இந்த ஆய்வு மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்படும் எனவும், வரும் வாரத்தில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்