மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் கோரிய மனுவை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட ராஜகோபாலனை, சமீபத்தில் 3 நாள் காவலில் எடுத்து காவல்துறை விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராஜகோபாலன் தாக்கல் செய்த மனு போக்சா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாத சூழலில் ஜாமின் வழங்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.