சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்பது குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா சூழலில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ வாரியங்களின் 12ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராததால் தேர்வு நடத்துவது குறித்து சிபிஎஸ்இ இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.
தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து இரு நாட்களில் முடிவெடுக்க உள்ளதாகவும், அதற்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் கோரினார். இதையடுத்து வழக்கு விசாரணையை வியாழக் கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.