பாலியல் புகாரில் சிக்கிய தடகள பயிற்சியாளர் நாகராஜனை ஜூன் 11 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நந்தனம் ஜிஎஸ்டி அலுவலகத்தில் உதவி சூப்பிரண்டாக பணியாற்றி வரும் நாகராஜன், பாரிமுனையில் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.
இவரிடம் பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்ட தடகள வீராங்கனைகள் தமிழ்நாடு மாநில தடகள சங்கத்தில் பாலியல் புகார் அளித்தனர். இதனையடுத்து நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட நாகராஜனை பூக்கடை போலீசார், இன்று காலை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவரை ஜூன் 11 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.