பாலியல் புகாருக்குள்ளான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ராஜகோபாலானால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு மாணவிகள் சில தினங்களுக்கு முன் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
ராஜகோபாலன் மீது அடுத்தடுத்து மாணவிகள் புகார் அளித்து வருவதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போதுவரை ராஜகோபலனால் பாதிக்கப்பட்ட 5 மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.