செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னையில் நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு

May 30, 2021 11:10:33 AM

சென்னையில் நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படும் என  மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகைக் கடை வியாபாரிகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருள்களை நாளை  முதல் நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்தும் காய், பழங்கள், மளிகைப் பொருள்களை வாகனங்கள் மூலம் கொண்டு வருவதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில்லறை வியாபாரிகள் விற்பனைக்குத் தேவையான மளிகைப் பொருள்களை கோயம்பேடு மற்றும் கொத்தவால்சாவடி ஆகிய இடங்களில் உள்ள மொத்த வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அவர்களின் வாகனங்களுக்கு மண்டல அலுவலகங்களில் இன்று அனுமதிச்சீட்டு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களிலிருந்து அத்தியாவசியப் பொருள்களை மட்டும் மின்னணு வர்த்தகத்தின் மூலம் அரசின் வழிமுறைகளின்படி விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 


Advertisement
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
2 நாட்களாக , வீட்டில் மயங்கி கிடந்த மூதாட்டி - மீட்ட தீயணைப்பு வீரர்கள்
14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் - இராணுவ வீரர் தலைமறைவு
தமிழக பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற கபடி போட்டியில் வீரர்கள் மீது சண்டிகர் அணியினர் தாக்குதல்..
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்றவர்கள் மீது மோதி விபத்து - 2 பெண் உயிரிழப்பு
சாதம் வடித்த போது சூடான கஞ்சி மேலே ஊற்றி விபத்து - சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு..
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement