பொது சுகாதாரத்துறையின் கீழ் கறுப்பு பூஞ்சை நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நோய்க்கு ஆளாகுபவர்கள் உடனடியாக, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கறுப்பு பூஞ்சை நோய் குறித்து தேவையற்ற பீதி தேவையில்லை என்றார்.சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள் , ஸ்டிராய்டு எடுத்துக்கொள்பவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.