சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்படும், உயிர்காக்கும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்தை, ஏராளமானோர் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உயிர்காக்கும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்தை நேரடியாக பெற்றுக் கொள்ளும் வகையில், கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, டோக்கன் முறையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 3-வது நாளான இன்றும் ஏராளமானோர் வந்து காத்திருந்து டெம்டெசிவிர் மருந்தை வாங்கிச் செல்கின்றனர்.
ரெம்டெசிவிர் ஒரு டோஸ் ஆயிரத்து 545 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சிறப்பு மையத்தில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மட்டுமே மருந்துகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 24 மணி நேரமும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.