சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று கடந்த மாதம் முதல் அதிகரிக்க தொடங்கிஉள்ளது. இதையடுத்து வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக 16 ஆயிரம் களப்பணியாளர்கள், தன்னார்வலர்களை மீண்டும் பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 மருத்துவர்கள் மற்றும் 4 ஆயிரம் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்களை நியமித்துள்ளது. 8-ந்தேதி முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி தொடங்கும் என்றும்,200 வார்டுகளிலும் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.