பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தாம் மற்றும் முடிவு செய்ய முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பிரச்சனையில் விலை குறைப்பு மட்டுமே அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் என்றார்.
மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் கலந்து பேசி, விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் தான் முழு முடிவையும் எடுப்பதாக அவர் குறிப்பிட்டார். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர ஜி.எஸ்.டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.