செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Feb 20, 2021 04:41:42 PM

சென்னை மெட்ரோ ரயில் கட்டணங்களை குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதிகபட்ச கட்டணம் 70 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2 கிலோமீட்டர் வரை 10 ரூபாய் கட்டணம் என்பதில் மாற்றமில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 முதல் 4 கிலோமீட்டர் வரை 20 ரூபாய் கட்டணம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி அந்த கட்டணத்தில்  5 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.

4 முதல் 6 கிலோமீட்டர் வரை 30 ரூபாயும், 6 முதல் 12 கிலோமீட்டர் வரை 40 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 30 ரூபாய் கட்டணத்தில் 12 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். 12 முதல் 18 கிலோமீட்டர் வரை 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 21 கிலோமீட்டர் வரை 40 ரூபாய் கட்டணத்திலேயே பயணிக்கலாம்.

18 முதல் 24 கிலோமீட்டர் வரை 60 ரூபாய் கட்டணமும், 24 கிலோமீட்டருக்கு மேல் 70 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 32 கிலோமீட்டர் வரை  50 ரூபாய் கட்டணத்திலேயே பயணிக்கலாம். கியூ.ஆர்.கோடு மற்றும் தொடுதல் இல்லா மதிப்புக் கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம், வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான வழித்தடத்திற்கும் சேர்த்து அதே 100 ரூபாயாகவே இருக்கும்.

இதேபோல ஒரு மாத வரையறுக்கப்படாத கட்டணம் கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து 2500 ரூபாய் ஆகவே நீடிக்கும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீத  தள்ளுபடி வழங்கப்படும். இந்த கட்டணக் குறைப்பு வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement
ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது வருடாந்திர பிரம்மோற்சவம்.. சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு..!
ஏமனை நோக்கி அமெரிக்க, இங்கிலாந்து படைகள் தாக்குதல்.. ஹமாஸ், ஹெஸ்புல்லாவை அடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு குறி..!
சென்னைக்கு விமானத்தில் 6 கிலோ தங்கக்க கட்டிகள் கடத்தல் - 4 பேர் கைது
பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்.. இரு நாட்டு உறவுகள் மேம்படுமா என எதிர்பார்ப்பு..!
திருப்பதி லட்டு கலப்பட்ட விவகாரம்... புதிய விசாரணைக்குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
சுற்றுலாப் பயணி தவற விட்ட தங்கச் சங்கிலியை கண்டெடுத்து ஒப்படைத்த 2 சிறுவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு
ஊராட்சி வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
கொரிய தீபகற்ப பாதுகாப்புக்கும், அமைதிக்கும் எதிராகச் செயல்படுவது தென்கொரியாதான் - கிம் ஜோங் உன்
நடிகர் விஜய்யின் த.வெ.க ஒரு குட்டி திராவிட கட்சியைப் போலத்தான் இருக்கிறது: தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
ரஷ்யாவின் கம்சட்ஸ்கி தீபகற்பத்தில், கழிமுகத்தில் சிக்கிக்கொண்ட 4 ஓர்கா இன திமிங்கலங்கள்

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement