செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை இழக்கவில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணாசமி பேட்டி...

Feb 16, 2021 05:30:29 PM

புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதாக கூறி பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்றத்தை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30 பேர், நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என 33 பேர் இருப்பார்கள். கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி கடந்த ஆண்டு பறிக்கப்பட்டது. சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

அதைத்தொடர்ந்து மல்லாடி கிருஷ்ணாராவும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். 

பெரும்பான்மைக்கு 15 இடங்கள் தேவை என்ற நிலையில், பேரவையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மையை இழந்து விட்ட நாராயணசாமி தார்மீக பொறுப்பேற்று உடனடியாக தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, என்ஐஆர் காங்கிரஸ், அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

இதையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்றார். இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட இருப்பதாக தெரிவித்தார்.


Advertisement
2 நாட்களாக , வீட்டில் மயங்கி கிடந்த மூதாட்டி - மீட்ட தீயணைப்பு வீரர்கள்
14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் - இராணுவ வீரர் தலைமறைவு
தமிழக பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற கபடி போட்டியில் வீரர்கள் மீது சண்டிகர் அணியினர் தாக்குதல்..
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்றவர்கள் மீது மோதி விபத்து - 2 பெண் உயிரிழப்பு
சாதம் வடித்த போது சூடான கஞ்சி மேலே ஊற்றி விபத்து - சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு..
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது
மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது..
கடலில் நீராடிய 2 பெண் பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு..
சிறுமி, இளைஞரை பட்டப்பகலில் வெட்ட முயன்றவர் கைது..

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement