வாட்ஸ்அப் மட்டுமல்ல அனைத்து செயலிகளும் பயனாளர்களின் தகவல்களை திரட்டுவதாகக் கூறியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், டேட்டா பாதுகாப்பு பற்றி கவலைப்படுபவர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தாதீர்கள் என கூறியுள்ளது.
வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிசி, தனிநபர் அந்தரங்கம் பேணும் உரிமைக்கு எதிராக உள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் சச்தேவா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு வாட்ஸ்அப் பிரச்சனை என்றால், வேறு செயலிக்கு மாறிக் கொள்ளலாமே என்று நீதிபதி குறிப்பிட்டார்.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, பிசினஸ் கணக்குகளுக்கு மட்டுமே பாலிசி மாற்றங்கள் பொருந்தும் என்று விளக்கம் அளித்தார்.