பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் வாகனங்களால் தாம்பரம், மதுராந்தகம் உள்ளிட்ட ஊர்களில் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற லட்சக்கணக்கானோர், விடுமுறை முடிந்து சென்னை திரும்பினர்.
இதனால் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச் சாவடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல் தாம்பரம், ஸ்ரீபெரும்புதூரிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால், அரை கிலோ மீட்டர் தொலைவைக் கடக்கவே அரை மணி நேரம் பிடிப்பதாக வாகன ஓட்டிகள் கூறினர்.