முக்கிய அரசியல் பிரமுகரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக வந்த தகவலை அடுத்து பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த அரசியல் பிரமுகரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தை மற்றும் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது.
சம்மந்தப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது? யார் அனுப்பியது? என பல்வேறு கோணங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.