திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தினமும் மாலை 6 மணிவரை இருந்த தரிசன நேரம் இரவு 8 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அந்த கோவிலில் தினமும் காலை 7.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால், தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் தினமும் 20 ஆயிரம் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி அளித்தது.
மாலை 6 மணிவரை இருந்த தரிசன நேரம் இரவு 8 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோவிலில் தனுர் மாத பூஜைகள் தினமும் காலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை நடக்கிறது என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.