சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே லத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தமிழகம் முழுதும் இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக்குகள் செயல்பாட்டுக்கு வரும் என்றார். ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் வர்க்கமே விவசாயிகள் என்று தெரிவித்த அவர், தானும் ஒரு விவசாயி என குறிப்பிட்டார்.
ஊரகப்பகுதி விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவசேவை கிடைக்க வேண்டும் என்பதே அம்மா மினி கிளினிக் திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.