திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய, கட்டுப்பாடுகளை நீக்கி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கொரோனா தொற்று பரவலால் விதிக்கப்பட்டு இருந்த தடை மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுக்குட்பட்டோர் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்றும்,கோவிலில் அவர்களுக்கு தனி வரிசைகள் இல்லை என்றும் தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வர வேண்டும் என்றும், டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.