ராமேசுவரம் அருகே மீன்பிடி படகில் கடத்தி வரப்பட்ட நாலரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை கடலோர காவல் படை பறிமுதல் செய்துள்ளது.
இலங்கையில் இருந்து ராமேசுவரம் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து கடலோர காவல்படையும், வருவாய் புலனாய்வு பிரிவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ராமேசுவரத்தை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்றில் 9 கிலோ தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நாலரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர், தங்கத்தையும், அதனை கடத்தி வந்த மீனவர்களையும், வருவாய் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவற்றை கடத்தி வந்த மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த பையஸ் அகமது, முகமது பாரூக், முகம்மது ரசாக், ஜாஸ் அகமத், ஜெயனூல் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.