அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா விவகாரத்தில், கூடுதல் ஆவணங்களுடன் இன்று ஆஜராக பதிவாளர் கருணாமூர்த்திக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பசுமைவழிச் சாலையில் உள்ள அலுவலகத்தில் நேற்று ஆஜரான அவர், 2018-ம் ஆண்டு துணைவேந்தராக சுரப்பா பொறுப்பேற்றது முதல், தற்போது வரை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள், நியமனங்கள், டெண்டர்கள் குறித்த அனைத்து ஆவணங்களையும் 3 பெரிய பெட்டிகளில் ஒப்படைத்தார்.
பின்னர் பேசிய பதிவாளர் கருணாமூர்த்தி, , விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிவருவதாக தெரிவித்தார்.