சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஒக்கியம் துரைப்பாக்கம் மடு மற்றும் முட்டுக்காடு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணைக்கு புதிய கால்வாய் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
முட்டுக்காடு முகத்துவாரத்தை 30 மீட்டரில் இருந்து 100 மீட்டராக அகலப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக கூறிய அவர், மேற்கு தாம்பரம், வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க 70 கோடி ரூபாய் செலவில் புதிதாக கால்வாய் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.