திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாத பெளர்ணமியை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு மலையப்ப சுவாமியை வழிபட்டனர்.
கொரோனா காரணமாக கடந்த 7 மாத காலமாக நடைபெறாமல் இருந்த கருடசேவை மீண்டும் தொடங்கி இருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.