பொறியியல் கல்லூரிகளை போல் மருத்துவக் கல்லூரிகளும் அதிகரித்துவிடும் என்பதால், புதிதாக தனியார் மருத்துவ கல்லூரிகள் திறக்க அனுமதியளிக்க வேண்டாம் என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.
புதிதாக நிறுவப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளை நடப்பாண்டிற்கான மருத்துவ கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கக்கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த 11 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மருத்துவ கல்லூரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது என்ற நீதிபதிகள், புதிதாக தனியார் மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதியளிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.