தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 760 கன அடியாக உயர்ந்துள்ளது.
மொத்த உயரமான 52 அடியில் 50.10 அடி நிரம்பியுள்ள நிலையில், விநாடிக்கு 587 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து எந்த நேரத்திலும் கூடுதலாக நீர் திறக்கக் கூடும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.