பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களின் கருத்துகளின் அடிப்படையில் முடிவு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே அயலூரில் வேளாண்மை கூட்டுறவு வங்கியை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளி வேலை நாட்கள் குறைவாக உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.