சென்னை துறைமுகத்தில் இருந்து புறநகர் பகுதியை இணைக்க 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வழி அல்லது எட்டு வழி தடத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்ஏ புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு ஒப்புதல் அளித்த பின்பு மேம்பாலப் பணிகள் நடைபெறும் என்றும், பணிகள் நிறைவு பெற்ற பின் சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்றும் கூறினார்.
முன்னதாக தமிழகத்தில் நெடுஞ்சாலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் நடைபெற்றது.
சென்னையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.