பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், 71 ஆயிரத்து 195 இடங்களே நிரம்பி உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கு கடந்த ஒன்றாம் தேதி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு தொடங்கியது. இதில், சிறப்புப் பிரிவு மற்றும் இன்று காலை வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 4 கட்டங்களாக நடந்த கலந்தாய்வு முடிவில் 71,195 இடங்கள் நிரம்பின.
பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பப் பதிவின் போது காட்டிய ஆர்வத்தை, கலந்தாய்வில் மாணவர்கள் காட்டாததால், 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நடப்பாண்டில் காலியாக உள்ளதாகவும் இதற்கு விரைவில் துணை கலந்தாய்வு நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.