தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதோடு, மேலும் பின்னடைவை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
90 சதவீத நுரையீரல் பாதிப்பு மற்றும் வேறு பிற நோய்களும் உள்ளதால், சிகிச்சைகளை அமைச்சரின் உடல் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. ரத்தத்திலும் ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைந்து வருவதாகவும், உயிர்காக்கும் எக்மோ கருவி சிகிச்சையிலும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வயது முதிர்வு மற்றும் நோய்களின் தாக்கம், சிகிச்சையில் மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ஓ.எஸ்.மணியன் மற்றும் தஞ்சை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.