சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று மாயமான 10 மீனவர்கள், 55 நாட்களுக்கு பிறகு மியான்மர் நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
காசிமேடு நாகூரார் தோட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த ஜூலை 22ம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் 55 நாட்கள் ஆகியும் கரை திரும்பாமல் இருந்தனர்.
இன்று அதிகாலை 10 மீனவர்களும் படகுடன் மியான்மர் நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க வந்து, திடீரென நடுக்கடலில் ஏற்பட்ட புயலால், எஞ்சின் மற்றும் ஜிபிஎஸ்’சில் ஏற்பட்ட பழுது காரணமாக, படகின் உரிமையாளரை தொடர்பு கொள்ள முடியாமல் நீரோட்டத்தில் திசைமாறி மியான்மர் நாட்டு கடற்பரப்பிற்குள் வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அங்குள்ள இந்திய தூதரகத்துக்கும், டெல்லியிலுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.