வரும் 13 ஆம் தேதி நடக்கவுள்ள நீட் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்து படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வை என்டிஏ என்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வு நாடு முழுதும் 3 ஆயிரத்து 842 மையங்களில் நடக்கிறது. மொத்தம் 15லட்சத்து 97 ஆயிரத்து 533 பேர் இந்த தேர்வை எழுத உள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர்.
இதற்கான ஹால் டிக்கெட்டை https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க ஆதார் எண்ணுடன் கூடிய சோதனை முறை அமல்படுத்தப்பட உள்ளது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்வு அறையில் 24 பேருக்கு பதிலாக தலா 12 பேர் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருவதுடன் தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.