சென்னை காசிமேடு மீன்சந்தையில் இன்று அதிகாலையிலேயே மக்கள் அதிகளவில் திரண்டு வந்து மீன்களை வாங்கிச் சென்றனர்.
கொரோனா காரணமாக தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் விடுத்த நிலையில் சென்னை காசிமேடு மீன் சந்தையில் நள்ளிரவு முதல் வியாபாரம் செய்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமைக்கு பிறகு இன்று மீன் மார்க்கெட் திறந்த நிலையில் மக்கள் கூட்டம் பெரிய அளவில் காணப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலர்கள் ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியுமாறு வலியுறுத்தினர்.
இங்கு வஞ்சரம் கூடை ஒன்றுக்கு 2ஆயிரம் ரூபாய்க்கும், வாளை ஆயிரம் ரூபாய்க்கும், சங்கரா ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.