கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகளில் ஒருவரான செந்தில் வாசனை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கந்த சஷ்டி சர்ச்சை தொடர்பான வழக்கில் இது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனலை தொடங்கிய அதன் முக்கிய நிர்வாகிகளான செந்தில் வாசன், சுரேந்திர நடராஜன் ஆகிய இருவருக்கும், 5 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு சைபர் கிரைம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
போலீஸ் காவலில் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி சுரேந்திரன் நடராஜன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் உத்தரவு பிறப்பித்த எழும்பூர் நீதிமன்றம், கறுப்பர் கூட்டம் செந்தில் வாசனை மட்டும் நான்கு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளது. அதே வேளையில் மற்றொரு நிர்வாகியான சுரேந்திரன் நடராஜனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.