ஆகஸ்டு முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வட்டாரத்தில் இரண்டு கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், ஓடையில் தடுப்பு அமைத்தல் ,பள்ளி தடுப்புச்சுவர் அமைத்தல் என பல்வேறு பணிகளைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின், கொரோனோ தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.