சென்னை கணிதவியல் நிறுவனத்தை உருவாக்கியவரான கணித மேதை சி.எஸ் சேஷாத்தரி வயது மூப்பு காரணமாக காலமானார்.
அவருக்கு வயது 88. 1932 ம் ஆண்டு பிப்.,29 ல் பிறந்த சேஷாத்திரி 1953 ம் ஆண்டுமெட்ராஸ் யுனிவர்சிட்டியில் கணிதவியலில் பி.ஏ.(ஹானர்ஸ்) பட்டம் பெற்றார்.
பாரீஸ் , கேம்பிரிட்ஜ், கொயோட்டோ உள்ளிட்ட பல்வேறு பல்கலை.,யில் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றி உள்ளார். தனது கணித திறைமையால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
சேஷாத்திரியின் மறைவு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கணிதத்தில் சிறப்பான பணிகளைச் செய்த ஒரு அறிவார்ந்த தலைவரை இழந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
அவரது முயற்சிகள், குறிப்பாக இயற்கணித வடிவவியலில், தலைமுறைகளாக நினைவில் வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் சேஷாத்ரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.