கொரோனா வைரல் பாதிப்பு காரணமாக ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வுகள் மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு தேதி மாற்றப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜே.இ.இ. முதன்மை நுழைவுத் தேர்வு ஜூலை 18 முதல் 23ம் தேதிக வரை நடத்த தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதேபோன்று மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்வு தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறது.
இதனிடையே ஜூலை 5ம் தேதி நடைபெற இருந்த சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரான பின் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.