கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அவரது மனைவி, இளைய மகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் திருச்சி கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைபடுத்திக் கொண்டிருந்த எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அவரது தாயார், மேலும் 2 மகள்கள், தங்கையின் கணவர், தங்கையின் குழந்தை, வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் என மேலும் 6 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனும், அவரது தாயாரும் கோவை பிஎஸ்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் திருச்சி கே.எம்.சி மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.