செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறப்பு

Jun 12, 2020 07:48:23 AM

காவிரி டெல்டா பாசனத்திற்காக, இன்று மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைக்க இருக்கிறார். 12 வருடத்திற்கு பிறகு இதே நாளில் தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை, தமிழகத்திலேயே மிகப்பெரிய அணையாகும். இந்த அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் உயரம் 120 அடிகளாகவும், கொள்ளளவு 93.4 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

காவிரி டெல்டாவின் 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்கு மேட்டூர் அணையையே நம்பி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இதுவரை 15 முறை ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் போதிய நீர் இருந்ததால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன் பிறகு கடந்த 12 ஆண்டுகளில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு மட்டும் கூடுதல் தண்ணீர் இருந்ததால் ஜூன் 6 ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. மேட்டூர் அணையில் 300 நாட்களுக்கு மேலாக 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது.

நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் 101 அடி தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் உள்ளதால் இன்று மேட்டூர் அணை திறக்கப்பட இருக்கிறது. காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட இருக்கிறார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்படுவதால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement
2 நாட்களாக , வீட்டில் மயங்கி கிடந்த மூதாட்டி - மீட்ட தீயணைப்பு வீரர்கள்
14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் - இராணுவ வீரர் தலைமறைவு
தமிழக பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற கபடி போட்டியில் வீரர்கள் மீது சண்டிகர் அணியினர் தாக்குதல்..
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்றவர்கள் மீது மோதி விபத்து - 2 பெண் உயிரிழப்பு
சாதம் வடித்த போது சூடான கஞ்சி மேலே ஊற்றி விபத்து - சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு..
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது
மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது..
கடலில் நீராடிய 2 பெண் பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு..
சிறுமி, இளைஞரை பட்டப்பகலில் வெட்ட முயன்றவர் கைது..

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement